ஓவிய கண்காட்சி

புதுச்சேரி: அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக் கூடத்தின் நுண்கலைத் துறை முதலாமாண்டு மாணவர்களின் ஓவிய கண்காட்சி, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அரவிந்தர் ஓவிய கண்காட்சி கூடத்தில் நடந்தது.

கண்காட்சியினைஅரசு செயலர் நெடுஞ்செழியன் துவக்கி வைத்தார். கலை மற்றும் பண்பாட்டு துறை முன்னாள் இயக்குனர் கலியபெருமாள் கண்காட்சியினை பார்வையிட்டு மாணவர்களின் கலைத்திறனை பாராட்டினார்.

கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட ஓவிய படைப்புகள் இடம்பெற்றன.

இதனைபாரதியார் பல்கலைக்கூட பேராசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Advertisement