சூலுார் அரசு பெண்கள் பள்ளி 'சென்டம்'
சூலுார் : பத்தாம் வகுப்பு தேர்வில், சூலுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராசி பாளையம் உயர்நிலைப்பள்ளி, காங்கயம்பாளையம் மேல்நிலைப்பள்ளி, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. செல்லப்பம் பாளையம் உயர்நிலைப்பள்ளி, 96 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
மாணவி நித்ய ஸ்ரீ 478 , கார்த்திகேயன், 482 மதிப்பெண்கள் பெற்றனர். அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி, 94.3 சதவீதம் தேர்ச்சி பெறறுள்ளது. மாணவன் விஸ்வநாதன், மாணவி வர்ஷா ஆகியோர், 493 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மாணவர்களுக்கு தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் வாழ்த்து தெரிவித்தனர். சூலுார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 90 சதவீதமும், சின்னியம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, பத்தாம் வகுப்பில், 97 சதவீதமும், 11ம் வகுப்பில், 100 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது.
மாணவிகள் கோகுல் ஸ்ரீ, 472, சுஜிபாலா, 471, ஹரிஷிதா,461 மதிப்பெண்கள் பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியரை தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் வாழ்த்தினர்.
மேலும்
-
பெண் கொலை: போலீசார் விசாரணை
-
புளோரிடா விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து: விமான நிலையம் மூடல்
-
4 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல்
-
அந்த மனசு தான் சார் கடவுள்; காஷ்மீரில் வீடு வீடாகச் சென்று உதவி செய்யும் ராணுவத்தினர்!
-
சரக்கு லாரி மோதி 10 மாடுகள் பலி; அதிர்ச்சியில் 100 மாடுகள் தப்பி ஓட்டம்!
-
ஒடிசாவை புரட்டி போடும் கனமழை; இடி, மின்னல் தாக்கியதில் 10 பேர் பலி