வருவாய் கோட்டத்தில் 20ல் ஜமாபந்தி துவக்கம் உள்வட்டம் வாரியாக தேதி அறிவிப்பு
பொள்ளாச்சி : பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில்,வரும், 20ம் தேதி ஜமாபந்தி துவங்குகிறது.
பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி, வரும், 20ம் தேதி காலை, 10:00 மணிக்கு மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமையில் துவங்குகிறது. உள்வட்டங்கள் வாரியாக ஜமாபந்தி நடக்கிறது.
வரும், 20ம் தேதி ராமபட்டிணம் உள்வட்டத்துக்கு உட்பட்ட புரவிபாளையம், சேர்வக்காரன்பாளையம், வடக்கிப்பாளையம், தேவம்பாடி, ராமபட்டிணம், மண்ணுார், குமாரபாளையம், திம்மங்குத்து, நல்லுாத்துக்குளி, அய்யம்பாளையம், ஜமீன் முத்துார், தாளக்கரை, போடிபாளையம், ராசிசெட்டிபாளையம், குளத்துார் கிராமங்களுக்கான ஜமாபந்தி நடக்கிறது.
* 21ம் தேதி வடக்கு உள்வட்டத்துக்கு உட்பட்ட, பூசநாயக்கன்தளி, குள்ளிச்செட்டிபாளையம், சந்தேகவுண்டன்பாளையம், ஒக்கிலிபாளையம், காபிலிபாளையம், சிக்கராயபுரம், ஆர்.பொன்னாபுரம், ஆச்சிப்பட்டி, குரும்பபாளையம், தொப்பம்பட்டி, வெள்ளாளபாளையம், அனுப்பர்பாளையம், ராசக்காபாளையம், புளியம்பட்டி, கிட்ட சூரம்பாளையம், டி.கோட்டாம்பட்டி, சங்கம்பாளையம், பொள்ளாச்சி நகரம் ஆகிய கிராமங்களுக்கு நடக்கிறது.
* 22ம் தேதி தெற்கு உள்வட்டத்துக்கு உட்பட்ட, ஜமீன் ஊத்துக்குளி, சூளேஸ்வரன்பட்டி, ஜமீன் கோட்டாம்பட்டி, மாக்கினாம்பட்டி, சின்னாம்பாளையம், ஊஞ்சவேலாம்பட்டி, கிராமங்களுக்கு நடக்கிறது.
* 23ம் தேதி பெரிய நெகமம் உள்வட்டத்துக்கு உட்பட்ட, கள்ளிப்பட்டி, பெரிய நெகமம், சந்திராபுரம், சின்ன நெகமம், மூலனுார், கொண்டேகவுண்டன்பாளையம், ஆவலப்பம்பட்டி, ஆ. நாகூர், கொல்லப்பட்டி, போலிக்கவுண்டன்பாளையம், ஏரிப்பட்டி, திப்பம்பட்டி, பூசாரிப்பட்டி.
* 27ம் தேதி கோலார்பட்டி உள்வட்டத்துக்கு உட்பட்ட சோளபாளையம், நாட்டுக்கல்பாளையம், நல்லாம்பள்ளி, சீலக்காம்பட்டி, கோமங்கலம், கோமங்கலம்புதுார், எஸ்.மலையாண்டிப்பட்டணம், கோலார்பட்டி, கஞ்சம்பட்டி, கூளநாயக்கன்பட்டி, சிஞ்சுவாடி கிராமங்களுக்கு நடக்கிறது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு தாலுகாவில், சப் - கலெக்டர் (பொ) நகர்புற நிலவரி உதவி ஆணையர் தலைமையில் வரும், 20ம் தேதி முதல் ஜமாபந்தி நடக்கிறது.
* வரும், 20ம் தேதி வடசித்துார் உள்வட்டத்துக்கு உட்பட்ட பணப்பட்டி, மெட்டுவாவி, கப்ளாங்கரை, குருநல்லிபாளையம், ஆண்டிப்பாளையம், பெரியகளந்தை, காட்டம்பட்டி, சிறுகளந்தை கிராமங்களுக்கு நடக்கிறது.
* 21ம் தேதி கிணத்துக்கடவு உள்வட்டத்துக்கு உட்பட்ட சொக்கனுார், பொட்டையாண்டிபுரம்பு, குதிரையாலம்பாளையம், வடபுதுார், சொலவம்பாளையம், அரசம்பாளையம், கொண்டம்பட்டி, கோதவாடி, கோடங்கிபாளையம், கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம், செட்டியக்காபாளையம்
* 22ம் தேதி கோவில்பாளையம் உள்வட்டத்துக்கு உட்பட்ட நெ.10 முத்துார், சங்கராயபுரம், சூலக்கல், கோவிந்தாபுரம், தேவராயபுரம், முள்ளுப்பாடி, மேட்டுப்பாளையம், காணியாலம்பாளையம், சோழனுார், கிருஷ்ணராயபுரம், வரதனுார், கக்கடவு, வகுத்தம்பாளையம், தேவணாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு நடக்கிறது.
ஆனைமலை
ஆனைமலை தாலுகாவில், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் தலைமையில் ஜமாபந்தி நடக்கிறது.
* வரும், 20ம் தேதி ஆனைமலை உள்வட்டத்துக்கு உட்பட்ட பெத்தநாயக்கனுார், தென்சித்துார், சோமந்துரை, தென்சங்கம்பாளையம், ஆனைமலை, ஒடையகுளம், வேட்டைக்காரன்புதுார், காளியாபுரம் கிராமங்களுக்கு நடக்கிறது.
* 21ம் தேதி மார்ச்சநாயக்கன்பாளையம் உள்வட்டத்துக்கு உட்பட்ட ஆத்துப்பொள்ளாச்சி, மார்ச்சநாயக்கன்பாளையம், அம்பராம்பாளையம், சிங்காநல்லுார், நாயக்கன்பாளையம், வக்கம்பாளையம், பெரியபோது கிராமங்களுக்கு நடக்கிறது.
* 22ல் கோட்டூர் உள்வட்டத்துக்கு உட்பட்ட சமத்துார், பில்சின்னாம்பாளையம், எஸ்.பொன்னாபுரம், தளவாய்பாளையம், பழையூர், தென்குமாரபாளையம், வீரல்பட்டி, தொண்டாமுத்துார், கம்பாலபட்டி, கரியாஞ்செட்டிபாளையம், கோட்டூர், அங்கலகுறிச்சி, துறையூர், ஜல்லிபட்டி, அர்த்தநாரிபாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு நடக்கிறது.
வால்பாறை
வால்பாறை தாலுகாவில், தாட்கோ மாவட்ட மேலாளர் தலைமையில் வரும், 20ம் தேதி, வால்பாறை உள்வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு ஜமாபந்தி நடக்கிறது.
மேலும்
-
கனிம வளத்துறையில் கோடிக்கணக்கில் அரசுக்கு நஷ்டம்; அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்; காத்திருப்போர் பட்டியலில் கனிமவள உதவி இயக்குனர்!
-
பாகிஸ்தானை தோலுரிக்கும் எம்.பிக்கள் குழு; சசிதரூர், கனிமொழி, ஓவைசிக்கு வாய்ப்பு
-
அதிகாலை பயணத்தில் விபத்து; கட்டுப்பாடு இழந்த ஆம்னி பஸ் மோதி நால்வர் பலி
-
அ.தி.மு.க., மாஜி அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு
-
உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை அதிகரிக்கணும்: உக்ரைன் அதிபர் வலியுறுத்தல்
-
புலிக்குட்டியை தொட்டுப் பார்த்தவர் மீது பாய்ந்தது வழக்கு!