'போன் பார்த்தால் துாக்கம் கெடும்'

மேட்டுப்பாளையம் : ஸ்மார்ட் போன்களில் இருந்து வரும் வெளிச்சம், மெலோடோனின் சுரப்பை குறைப்பதனால் துாக்கம் பாதிக்கப்படுகிறது. துாங்கும் நேரத்தை செட் செய்து போன் உபயோகிக்க மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனர்.

கண் சிமிட்டாமல் ஸ்மார்ட் மற்றும் மொபைல் போன் திரையை தொடர்ந்து பார்ப்பதால், கண் சோர்வு, காய்ந்த கண்கள், பார்வைத்திறன் குறைபாடு ஏற்படுகிறது. போனில் இருந்து வரும் வெளிச்சம் மெலோடோனின் சுரப்பை குறைப்பதனால் துாக்கம் பாதிக்கப்படுகிறது. கழுத்தை சாய்த்து வைத்து போன் உபயோகிப்பதனால் கழுத்தில் இருக்கும் எலும்பு பாதிக்கப்படுகிறது. தொடர்ந்து தட்டச்சு செய்வதனால், விரல்களில் மற்றும் மணிக்கட்டில் வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஸ்மார்ட் போன்களில் மக்கள் மூழ்கிக் கிடப்பதால், மனிதர்கள் ஒருவருக்கொருவர் நேரில் பேசிப் பழகும் வாய்ப்பு குறைந்து தனிமை அதிகரிக்கிறது.

அடிக்கடி வரும் நோட்டிபிகேஷன் காரணமாக, வேலையில் கவனம் குறைவதுடன் பதட்டமும் அதிகரிக்கிறது. சாலையில் செல்லும் போது போன் உபயோகிப்பது விபத்துகளை ஏற்படுத்துகிறது.

துாங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் போன் பயன்படுத்துவதை நிறுத்தலாம். துாங்கும் நேரத்தை செட் செய்து வைப்பது, பிரேக் டைம் மற்றும் ப்ளூ லைட் பில்டர்கள் உபயோகிப்பது பயன் தரும். ஸ்மார்ட் போன் உபயோகிக்கும் போது சரியான முறையில் அமர்வது கழுத்து வலியை குறைக்கும் என காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலைய, ஹோமியோபதி பிரிவு அரசு உதவி மருத்துவர் ஜெயஸ்ரீ மீனாட்சி கூறினார்.----

Advertisement