கான்கிரீட் பெயர்ந்து விழுந்து எலும்புகூடான மின்கம்பம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் அருகே, கான்கிரீட் பெயர்ந்து விழுந்து, எலும்பு கூடாக காட்சியளிக்கும் மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில், மின் கோட்டத்திற்கு உட்பட்ட ஒவ்வொரு துணை மின்நிலையங்களில், மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. எனினும், சில பகுதிகளில், சிதிலமடைந்து ஆபத்தான நிலையில், மின் கம்பங்கள் காணப்படுகின்றன.
அதில், பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் அருகே மின்கம்பம் பழுதடைந்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதில், மின் ஊழியர்கள் ஏறி, இறங்குவது ஆபத்தானது. அசம்பாவிதம் தவிர்க்க, இக்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் அருகே, கூட்ெஷட் ரோட்டில் வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன. இந்த ரோட்டில், ரயில்வே ஸ்டேஷன் அருகே மின்கம்பம் பழுதடைந்துள்ளது.
மின்கம்பத்தில் கான்கிரீட் பெயர்ந்து சிதிலமடைந்து, எலும்புக்கூடு போல மாறியுள்ளது. எப்போது வேண்டுமென்றாலும் கீழே விழும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் கவனம் செலுத்தி மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும்,' என்றனர்.
மேலும்
-
பெண் கொலை: போலீசார் விசாரணை
-
புளோரிடா விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து: விமான நிலையம் மூடல்
-
4 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல்
-
அந்த மனசு தான் சார் கடவுள்; காஷ்மீரில் வீடு வீடாகச் சென்று உதவி செய்யும் ராணுவத்தினர்!
-
சரக்கு லாரி மோதி 10 மாடுகள் பலி; அதிர்ச்சியில் 100 மாடுகள் தப்பி ஓட்டம்!
-
ஒடிசாவை புரட்டி போடும் கனமழை; இடி, மின்னல் தாக்கியதில் 10 பேர் பலி