முதல் முறையாக 100 சதவீதம் தேர்ச்சி; அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
பந்தலுார் : பந்தலுார் சேரம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு பொது தேர்வு, 46 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
கடந்த, 39 ஆண்டுகளாக, 10ம் வகுப்பு தேர்வு எழுதி வரும் நிலையில், நேற்றைய தேர்வு முடிவில் முதல் முறையாக, 100 சதவீத தேர்ச்சி பெற்றனர். இதை தொடர்ந்து, பள்ளி தலைமை ஆசிரியர் பொன்முத்து நம்பிராஜன் தலைமையிலான ஆசிரியர் குழுவினருக்கு, பள்ளி பி.டி.ஏ., தலைவர் காட்டுராஜா, துணைத் தலைவர் மணிகண்டன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் குளோரி ஷீலா தலைமையிலான குழுவினர் பாராட்டு தெரிவித்தனர்.
பந்தலுார் அருகே குந்தலாடி அரசு உயர்நிலை பள்ளியில், 24 மாணவ, மாணவிகள், 10 வகுப்பு பொது தேர்வு எழுதினர். அதில், அனைவரும் தேர்ச்சி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் பஜீத்குமார் தலைமையிலான ஆசிரியர்களுக்கு பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மேலும்
-
கனிம வளத்துறையில் கோடிக்கணக்கில் அரசுக்கு நஷ்டம்; அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்; காத்திருப்போர் பட்டியலில் கனிமவள உதவி இயக்குனர்!
-
பாகிஸ்தானை தோலுரிக்கும் எம்.பிக்கள் குழு; சசிதரூர், கனிமொழி, ஓவைசிக்கு வாய்ப்பு
-
அதிகாலை பயணத்தில் விபத்து; கட்டுப்பாடு இழந்த ஆம்னி பஸ் மோதி நால்வர் பலி
-
அ.தி.மு.க., மாஜி அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு
-
உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை அதிகரிக்கணும்: உக்ரைன் அதிபர் வலியுறுத்தல்
-
புலிக்குட்டியை தொட்டுப் பார்த்தவர் மீது பாய்ந்தது வழக்கு!