ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டை சகோதரியர்

கோவை : கோவை, ராமநாதபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் இரட்டைச் சகோதரிகள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்று, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
பிறப்பில் தொடங்கி, பள்ளிக் கல்வி வரையிலான பல பயணங்களில் ஒன்றாக செயல்பட்டு வந்த மாணவியர் கவிதா, கனிகாவின் வெற்றிபயணம், 10ம் வகுப்பு பொதுத்தேர்விலும் தொடர்ந்தது.
இருவரும் கணித பாடத்தில் ஒரே மதிப்பெண்கள் பெற்றதுடன், மொத்த மதிப்பெண்களும் ஒருசேர எடுத்திருக்கின்றனர். கவிதா தமிழில்,- 95, ஆங்கிலம், 98, கணிதம், 94, அறிவியல், 89, சமூக அறிவியல், 98 என, 474 மதிப்பெண் எடுத்துள்ளார். கனிகா தமிழ், 96, ஆங்கிலம், 97, கணிதம், 94, அறிவியல், 92, சமூக அறிவியல், 95 என, 474 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மாணவியர் கூறுகையில், 'ஒரே மதிப்பெண் வரும் என எதிர்பார்க்கவில்லை. பள்ளி பருவத்தேர்வுகளில் கவனக்குறைவால், நல்ல மதிப்பெண்கள் எடுக்க முடியவில்லை. பொதுத்தேர்வை கவனத்துடன் எழுதினோம். கணிதம் கடினமாக இருந்தது. நாங்கள் நன்றாக படித்து பெற்றோருக்கு உறுதுணையாக இருப்போம்' என்றனர்.
கைதிகள் ஆல்பாஸ்
சேலம் மத்திய சிறையில், 25 கைதிகள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்தனர். அதில், அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.
இவர்களில் கோபி, 412, கோவிந்தராஜ், 372, முத்து, 366 மதிப்பெண்கள் பெற்று, முதல் மூன்று இடங்களை பிடித்தனர். தேர்ச்சி பெற்ற கைதிகளை, சிறை எஸ்.பி., வினோத், சிறை ஆசிரியர்கள் பாராட்டினர்.
கண்டக்டர் மகள்
தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே குறிச்சி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் - சத்யா தம்பதி. இவர்களுக்கு விக்னேஷ் என்ற ஒரு மகனும், சோபியா என்ற மகளும் உள்ளனர். வெங்கடேசன் கும்பகோணம் போக்குவரத்து கழக கண்டக்டராக உள்ளார்.சோபியா, அரியலுார் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்தார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 500க்கு 499 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார். சோபியாவை, போக்குவரத்து கழக பொது மேலாளர் முத்துக்குமாரசாமி நேற்று நேரில் சென்று பாராட்டினார்.
மேலும்
-
பெண் கொலை: போலீசார் விசாரணை
-
புளோரிடா விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து: விமான நிலையம் மூடல்
-
4 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல்
-
அந்த மனசு தான் சார் கடவுள்; காஷ்மீரில் வீடு வீடாகச் சென்று உதவி செய்யும் ராணுவத்தினர்!
-
சரக்கு லாரி மோதி 10 மாடுகள் பலி; அதிர்ச்சியில் 100 மாடுகள் தப்பி ஓட்டம்!
-
ஒடிசாவை புரட்டி போடும் கனமழை; இடி, மின்னல் தாக்கியதில் 10 பேர் பலி