மியாட் மருத்துவமனை சிறப்பு நிபுணர் இன்று விழுப்புரம், கடலுார், புதுச்சேரி வருகை

புதுச்சேரி: சென்னை மியாட் மருத்துவமனை சிறப்பு நிபுணர் இன்று 17ம் தேதி புதுச்சேரி, விழுப்புரம், கடலுாரில் ஆலோசனை வழங்குகிறார்.

சென்னை மியாட் மருத்துவமனை சிறப்பு மருத்துவர், இன்று 17ம் தேதி காலை 10 மணி முதல், 12 மணிவரை விழுப்புரம் ராஜ ராஜேஸ்வரி நகர், ஆர்.ஆர்.எம்., காஸ்ட்ரோ சூப்பர் ஸ்பெஷாலிட்டி கிளினிக்கில், கல்லீரல் நோய்கள் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை குறித்து ஆலோசனை வழங்குகிறார்.

தொடர்ந்து கடலுார், மஞ்சக்குப்பம் பிவெல் மருத்துவமனையில் மதியம் 2:00 மணி முதல் மதியம் 3:30 மணி வரையும், புதுச்சேரி மடுவுப்பேட் இ.சி.ஆர்., பிவெல் மருத்துவமனையில் மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரையும் ஆலோசனை வழங்குகிறார்.

இதில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, கொழுப்பு கல்லீரல், சிரோசிஸ், மஞ்சள் காமாலை, கல்லீரல் புற்றுநோய், ஹெபடைடிஸ் பி அண்டு சி, இரைப்பை குடல் ரத்தப் போக்கு, கணைய பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. வயிற்று வலி (சிரமம், கட்டி) வயிறு வீக்கம், குமட்டல் அல்லது வாந்தி, ரத்த வாந்தி, தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல், ரத்தம் வெளிர், கருப்பு நிற மலம் உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்கள் ஆலோசனை பெறலாம்.

வழக்கமான பரிசோதனை செய்ய விரும்புவர்களும் வந்து ஆலோசனை பெறலாம். மருத்துவ முகாமில் பங்கேற்க வரும்போது முந்தைய மருத்துவ பதிவுகள் இருந்தால் அவசியம் கொண்டு வர வேண்டும். முகாமிற்கு வர முன் பதிவு அவசியம். முன்பதிவுக்கு 89259 84892, 91761 96516, எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement