மதுரை- சினிமா
கார் ரேஸிற்காக 42 கிலோ எடை குறைத்த அஜித்
'குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு கார் ரேஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் அஜித். அவர் அளித்த பேட்டியில், ''கார் ரேஸ் போட்டிகளுக்காக 2024, ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தற்போது வரை 42 கிலோ எடையை குறைத்துள்ளேன். கார் ரேஸ் காலகட்டத்தில் படம் நடிக்காமல் ரேஸில் கவனம் செலுத்துவதே சிறந்த வழி. எனது அடுத்தபடம் வரும் நவம்பரில் துவங்கி 2026 ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீசாகும்'' என்றார்.
பாலகிருஷ்ணாவிற்கு கதை கூறிய ஆதிக்
அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், இந்த படத்தின் வரவேற்பால் மீண்டும் அஜித் உடன் இணைவதாக தகவல் வந்தது. இந்நிலையில் இவருக்கு தெலுங்கில் இருந்து ஆபர் வந்துள்ளது. தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா திடீரென ஆதிக்கை அழைத்து தனக்கு ஏதேனும் கதை உள்ளதா என கேட்டுள்ளார். கமர்ஷியல் நிறைந்த அதிரடி ஆக் ஷன் கதை உடன் விரைவில் இவர்கள் கூட்டணியில் பட அறிவிப்பு வரலாம்.
'மூக்குத்தி அம்மன் 2'வில் இரண்டு நயன்தாரா
2020ல் ஆர்ஜே பாலாஜி இயக்கி, நடித்த 'மூக்குத்தி அம்மன்' படத்தில் அம்மனாக நடித்தார் நயன்தாரா. தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகிறது. சுந்தர்.சி இயக்க, நயன்தாரா, ரெஜினா, இனியா, யோகிபாபு, கன்னட நடிகர் துனியா விஜய் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு வளர்ந்து வரும் சூழலில் நயன்தாரா அம்மன் மற்றும் போலீஸ் என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறாராம்.
தாதாசாகேப் பால்கே படத்திற்கு போட்டா போட்டி
இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் தாதாசாகேப் பால்கேவின் வாழ்க்கையை படமாக எடுக்க ராஜமவுலி திட்டமிட்டுள்ளார். 2023ல் இதற்கான அறிவிப்பு வந்தது. மேட் இன் இந்தியா என்ற பெயரில் இந்த படம் உருவாக உள்ளது. இதில் அவரது வேடத்தில் தெலுங்கு நடிகர் ஜுனியர் என்டிஆரை நடிக்க வைக்க பேசி வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் இயக்குனரான ராஜ்குமார் ஹிரானியும் தாதாசாகேப் பால்கேவின் வாழ்க்கையை படமாக்க களமிறங்கி உள்ளார். இதற்கான திரைக்கதை பணிகள் நடக்கின்றன. இதில் இவரின் ஆஸ்தான நடிகரான அமீர்கான் நடிக்க போகிறாராம்.
ஜூலை 4ல் 'கிங்டம்' ரிலீஸ்
கவுதம் தின்னுாரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 12வது படம் 'கிங்டம்'. நாயகியாக பாக்யஸ்ரீ பரோஸ் நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. மே 30ல் இப்படம் ரிலீஸ் என அறிவித்தனர். ஆனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றத்தால் ரிலீஸை தள்ளி வைத்தனர். இப்போது ஜூலை 4ல் தெலுங்கு, தமிழில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். -----------------
மேலும்
-
பெண் கொலை: போலீசார் விசாரணை
-
புளோரிடா விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து: விமான நிலையம் மூடல்
-
4 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல்
-
அந்த மனசு தான் சார் கடவுள்; காஷ்மீரில் வீடு வீடாகச் சென்று உதவி செய்யும் ராணுவத்தினர்!
-
சரக்கு லாரி மோதி 10 மாடுகள் பலி; அதிர்ச்சியில் 100 மாடுகள் தப்பி ஓட்டம்!
-
ஒடிசாவை புரட்டி போடும் கனமழை; இடி, மின்னல் தாக்கியதில் 10 பேர் பலி