தேர்வில் முறைகேடு புகார் அதிகாரிகள் விசாரணை

கடலுா: கடலுாரில் பிளஸ் 2 தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த பள்ளிகளில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடலுார் மாவட்டம், பிளஸ் 2 தேர்வில் 96.06 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் பத்தாம் இடத்திற்கு முன்னேறியது. மொத்தமுள்ள 246 பள்ளிகளில் இருந்து 29 ஆயிரத்து 477 பேர் தேர்வு எழுதினர். அதில் 28 ஆயிரத்து 316 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தில் 4 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், ஒரு குறிப்பிட்ட பாடத்தில் அனைவரும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தேர்வு மைய தலைமை கண்காணிப்பாளர், தேர்வறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் கடந்த இரு நாட்களாக விசாரணை நடத்தி வருகிறார்.

பள்ளிகளில் கடந்த காலங்களில் அந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்கள் மோகன், துரைபாண்டியன், ஞானசங்கர் அடங்கிய குழுவினர் விசாரிக்கின்றனர்.

Advertisement