ரூ.15 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் வருவாய் ஆய்வாளர் ஜான் டைசன்!

7

திருவாரூர்: திருவாரூரில் இடத்திற்கான பட்டா அளவில் இருக்கும் பிழையை சரி செய்து கொடுப்பதற்கு ரூ.15,000 லஞ்சம் பெற்ற முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஜான் டைசன், 29, என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.


திருவாரூர் மாவட்டம் தெற்கு செட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வகணேஷ். இவர் தனக்கு சொந்தமான நிலத்தின் அளவு, உண்மையில் இருப்பதை காட்டிலும் பட்டாவில் குறைவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டா அளவில் இருக்கும் பிழையை சரி செய்து கொடுக்குமாறு, முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஜான் டைசன் இடம் மனு அளித்துள்ளார்.


அதன் பேரில், நிலத்தை அளவீடு செய்ய முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஜான் டைசன், 29, ரூ. 15 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இது குறித்து செல்வகணேஷ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் அறிவுறுத்தலின் பேரில், ஜான் டைசனுக்கு ரசாயனம் தடவிய பணத்தை, செல்வகணேஷ் கொடுத்தார். அப்போது, அங்கு பதுங்கியிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ.15,000 லஞ்சம் பெற்ற ஜான் டைசனை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர்.

Advertisement