பாகிஸ்தானுக்காக உளவு வேலை... பெண் யூடியூபர் உள்பட 6 பேர் கைது

35

சண்டிகர்: பாகிஸ்தானுக்காக உளவு வேலையில் ஈடுபட்ட பெண் யூடியூபர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.


பஹம்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி, இந்தியா தக்க பாடம் புகட்டியுள்ளது. இதனால், இருநாடுகளிடையே இடையே பதற்றமான சூழலே நிலவி வருகிறது.


மேலும், பாகிஸ்தானை ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டி வைத்துள்ள மத்திய அரசு, நமது நாட்டில் உள்ள களைகளை எடுக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. பயங்கரவாதிகளை ஒருபுறம் வேட்டையாடி வந்தாலும், பாகிஸ்தானுக்கு ஆதரவான செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுத்து வருகிறது.


அந்த வகையில், பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்து வந்தவர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், ஹரியானா மற்றும் பஞசாப் மாநிலங்களில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானுக்கு முகவர்களாகவும், ரகசியங்களை கொடுப்பவர்களாகவும், நிதி பரிமாற்றம் செய்பவர்களாகவும் இவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர்.


'டிராவல் வித் ஜோ' என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வரும் ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜோதி மல்ஹோத்ரா கடந்த 2023ம் ஆண்டு கமிஷன் ஏஜெண்ட் மூலம் விசா பெற்று பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். அங்கு பாகிஸ்தான் தூதரக அதிகாரி டேனிஸ் எனப்படும் எஹ்சான்-உர்-ரஹீம் என்பவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் பல பாகிஸ்தான் உளவுத்துறை நிறுவனங்களுடன் ஜோதிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.


மேலும், வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்டவைகளிலும் பாகிஸ்தானியருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்திய பகுதிகள் குறித்த ரகசியங்களை அவர்களுக்கு பகிர்ந்து வந்ததுடன், சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் ஆதரவாகவும் செயல்பட்டு வந்துள்ளார். ஜோதி மல்ஹோத்ராவிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement