போலீஸ் மீது அவதூறு பரப்புவதா?: திருநெல்வேலி எஸ்.பி., அலுவலகம் கண்டனம்

திருநெல்வேலி: "போலீஸ் மீது அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என திருநெல்வேலி எஸ்.பி., அலுவலகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி., சிலம்பரசன் அலுவலக செய்தி குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட போலீசார், பொது மக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது சட்டத்தின் அடிப்படையில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகின்றது. “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்ற கொள்கையின் அடிப்படையில், புகார்களின் தன்மை மற்றும் சான்றுகளின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.

சட்டத்திற்குட்பட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கத்துடன், உண்மைக்கு புறம்பான அவதூறுகளை பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தவறு செய்தவர் யாராக இருந்தாலும், அவர்கள்மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement