போலீஸ் செய்திகள்

'குட்கா' வியாபாரி கைது



நல்லுார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வள்ளியம்மை நகர் பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு சந்தேகப்படும் வகையில், நின்றிருந்த ஒரு நபரை பிடித்து சோதனையிட்ட போது அவரிடம் 3.4 கிலோ எடையில், தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்கள் இருந்தது தெரிந்தது. அதை வைத்திருந்த நாகராஜன், 36 என்பவரை கைது செய்து, அதைப் பறிமுதல் செய்தனர்.

மது விற்ற நபர்கள் கைது



திருப்பூர், கே.செட்டிபாளையம் பகுதியில் நல்லுார் போலீசார் நடத்திய சோதனையில், டாஸ்மாக் மதுக்கடை பார் அருகே, மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த, கந்தசாமி, 48 சிக்கினார். அவரிடமிருந்து 31 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வீரபாண்டி போலீசார் நடத்திய சோதனையில், அய்யம்பாளையம் 'டாஸ்மாக்' மதுக்கடை அருகே, மாசிலாமணி, 55 பிடிபட்டார். அவரிடம், 28 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதே போல் கல்லாங்காடு மதுக்கடை பார் அருகே, ரமேஷ், 35 என்பவர் சிக்கினார். அவரிடம் 29 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.

Advertisement