அமெரிக்காவில் கடும் சூறாவளி; 27 பேர் பலி; மீட்பு பணி தீவிரம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் சூறாவளியால் 27 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் திடீரென சூறாவளி ஏற்பட்டது. கென்டக்கி, மிசோரி மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மிசோரி மாகாணத்தில் செயின்ட் லூயிஸ் நகரில் மட்டும் 5,000 கட்டடங்கள் சேதம் அடைந்தன. சூறாவளி தாக்கியதில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன.
மரங்கள் முறிந்து விழுந்ததில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதம் அடைந்தன. பல இடங்களில் மின்சாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. சூறாவளி தாக்குதலில் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
தற்போது கென்டக்கி, மிசோரியில் மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை சூறாவளியால் 27 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.


மேலும்
-
பா.ஜ., தலைவருடன் சந்திப்பு; போலீஸ் ஏட்டு இருவர் மாற்றம்!
-
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக யாக சாலைக்கு முகூர்த்தக் கால்
-
அமைதிப்பேச்சு தோல்வி; உக்ரைன் மீது மிகப்பெரிய டிரோன் தாக்குதலை நடத்தியது ரஷ்யா!
-
ஜுலை 1ம் தேதியில் இருந்து மீண்டும் மின்கட்டண உயர்வா? தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
-
ஹீட் ஸ்ட்ரோக் அபாயம்
-
பீட்டா மீன்கள் துள்ளாத மனமும் துள்ளும்!