மெக்கானிக் கடையில் ஸ்கூட்டர் திருட்டு; வீடியோ வைரல்

விழுப்புரம்: விழுப்புரத்தில் மெக்கானிக் கடையில் ஸ்கூட்டரை மர்ம நபர் திருடி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

விழுப்புரம் அரசு சட்டக்கல்லுாரி சாலையில் பைக் மெக்கானிக் கடை உள்ளது. இங்கு, நேற்று காலை 9.00 மணிக்கு பழுது பார்ப்பதற்காக ஒருவர் தனது ஸ்கூட்டரை நிறுத்தி சென்றார். அடுத்த சில நிமிடங்களில்25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், அந்த கடைக்குள் புகுந்து ஸ்கூட்டரின் சாவியை எடுத்து வாகனத்தை திருடி சென்றார்.

ஸ்கூட்டரை மர்ம நபர் திருடிச் செல்லும் சி.சி.டி.வி., காட்சி சமூக வலைதளத்தில் வைரலானது. விழுப்புரம் தாலுகா போலீசார் திருட்டு தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

Advertisement