குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப் உத்தரவில் மாவட்ட சைபர் கிரைம் எஸ்.ஐ., ஈஸ்வரி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.எஸ்.ஐ., மகாலட்சுமி, கான்ஸ்டபிள் ஆனந்த் ஆகியோர் பொதுமக்களுக்கு சைபர் குற்றங்கள், குழந்தை திருமணங்களை தடுத்தல், பெண்கள் பாதுகாப்பு போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.சைபர் குற்ற உதவிக்கு 1098, பெண்கள் உதவி மையம், குடும்ப பிரச்னைக்கு 181 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தீர்வு பெறலாம் என தெரிவித்தனர்.

நேற்று திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் பயணிகள், ஆட்டோ டிரைவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement