1.10 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் விஜய் வெற்றி பெறுவார்; த.வெ.க., கட்சியினர் காமெடி

மதுரை : த.வெ.க., தலைவர் விஜய் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு 1.10 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று தங்கள் விருப்பத்தை கட்சியினர் இப்போதே போஸ்டராக ஒட்டி வருகின்றனர்.
த.வெ.க., துவங்கப்பட்டு ஓராண்டான நிலையில் சென்னை, கோவையை தொடர்ந்து மதுரையில் பூத் கமிட்டி கூட்டம் நடத்த அதன் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். அரசியல் திருப்புமுனைகளுக்கு பெயர் பெற்ற மதுரையில் அவர் போட்டியிட வேண்டும் என இங்குள்ள கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.
மக்களோடு மக்களாக அவர் இருக்கிறார் என்பதை காட்ட மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியபோது அவருக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து விஜய் நேர்த்திக்கடன் செலுத்தியது போல் போஸ்டர்கள் ஒட்டினர்.
இதற்கிடையே விஜய் குறித்து தொடர்ந்து நல்லவிதமாக கருத்து கூறிவரும்செல்லுார் ராஜூவுக்கு 'செக்' வைக்கும் விதம் அவரது மேற்கு தொகுதியில் 'விஜய் போட்டியிடுவார். 1.10 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று 'மக்கள் முதல்வராவார்' என்று போஸ்டர் ஒட்டி தங்கள் விருப்பத்தை கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
மதுரை மேற்கு தொகுதியை 'அ.தி.மு.க., கோட்டை' என்றுக்கூறி வரும் செல்லுார் ராஜூ, தொடர்ந்து அத்தொகுதியிலேயே போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார்.
அடுத்தாண்டு சட்டசபை தேர்தலில் அவருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் சமீபத்தில் தி.மு.க.,வில் மேற்கு தொகுதி அமைச்சர் மூர்த்தி வசம் ஒப்படைக்கப்பட்டது. அன்று முதல் செல்லுார் ராஜூவுக்கு பலவகைகளில் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.
விளாங்குடியில் நீர்மோர் பந்தல் அகற்றம், பொன்மேனியில் கல்வெட்டு மறைப்பு என தி.மு.க., தொடர்ந்து 'டார்ச்சர்' கொடுத்து வரும்சூழலில் த.வெ.க.,வினரும் செல்லுார் ராஜூவை வம்பிழுக்க துவங்கியுள்ளனர்.

மேலும்
-
அமெரிக்காவில் கடும் சூறாவளி; 27 பேர் பலி; மீட்பு பணி தீவிரம்
-
அமெரிக்காவில் 2 பேர் சுட்டுக்கொலை; உடற்பயிற்சி நிலையத்தில் கொடூர சம்பவம்
-
வால்பாறை மலைப்பகுதியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து; 70க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்
-
தமிழகத்தில் பரவலாக பெய்த கோடை மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு: முதல்வர் உமர் அப்துல்லா உறுதி
-
செங்கலுக்கு மாற்று பொருட்களை கட்டட பணிக்கு பயன்படுத்துவோர் கவனிக்க…