தேசிய டெங்கு ஒழிப்பு தினம்

கம்பம்: ஒவ்வொரு ஆண்டும் மே 16 ம் தேதியை தேசிய டெங்கு தினமாக மத்திய சுகாதார துறை கடைபிடித்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேசிய டெங்கு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

காமயகவுண்டன்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டாக்டர்கள் ஷிபாயா, முருகானந்தம், சித்தா டாக்டர் சிராசுதீன், சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார நர்சுகள் பங்கேற்றனர். குடிநீரை திறந்த நிலையில் வைக்க கூடாது, குடிநீர் உள்ள பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும், வீட்டிற்கு அருகில் சிரட்டை, டயர் போன்றவற்றில் நீர் தேங்கி நிற்க கூடாது என்பன விஷயங்களை பொதுமக்களுக்கு விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement