திருத்தணி சப்த கன்னியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

திருத்தணி:திருத்தணி - கன்னிகாபுரம் மாநில நெடுஞ்சாலையில் சப்த கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், திருத்தணி முருகன் கோவிலின் உபகோவில். இக்கோவிலின் திருப்பணிகள் முடிந்து, நேற்று முன்தினம் காலை கும்பாபிஷேக விழா கணபதி மற்றும் நவகிரக ஹோமத்துடன் துவங்கியது.

இதற்காக, கோவில் வளாகத்தில், ஒன்பது யாக சாலைகள், 108 கலசங்கள் வைத்து பூஜைகள் நடந்தன. நேற்று காலை இரண்டாம் கால யாக சாலை பூஜையும், மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜையும், மஹா பூர்ணாஹூதியும் நடந்தது.

இன்று அதிகாலை 5:00 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜை, காலை 7:00 மணிக்கு கலசங்கள் ஊர்வலம் மற்றும் காலை 9:00 மணிக்கு மூலவர் மற்றும் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை முருகன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Advertisement