உடல் உறுப்புகள் தானம்: 6 பேருக்கு மறுவாழ்வு

கும்மிடிப்பூண்டி,:துாத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்தவர் குமார், 60. ஆரணியில் வசித்தபடி விவசாய பயன்பாட்டிற்கான பூச்சிக்கொல்லி மருந்து கடை நடத்தி வந்தார். கடந்த 13ம் தேதி, ஆரணி சாலையோரம் நடந்து சென்றார்.
அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார். குடும்பத்தார் ஒப்புதலின்படி, அவரது கண்கள், சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், நுரையீரல் ஆகிய உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
அதன் வாயிலாக, ஆறு பேர் மறுவாழ்வு பெற்றனர். குமாரின் உடல், இறுதி சடங்கிற்காக அவரது சொந்த ஊரான உடன்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து ஆரணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமெரிக்காவில் 2 பேர் சுட்டுக்கொலை; உடற்பயிற்சி நிலையத்தில் கொடூர சம்பவம்
-
வால்பாறை மலைப்பகுதியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து; 70க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்
-
தமிழகத்தில் பரவலாக பெய்த கோடை மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு: முதல்வர் உமர் அப்துல்லா உறுதி
-
செங்கலுக்கு மாற்று பொருட்களை கட்டட பணிக்கு பயன்படுத்துவோர் கவனிக்க…
-
கட்டுமான பணிக்கு 'எம் சாண்ட்' பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை!
Advertisement
Advertisement