கட்டுமான பணிக்கு 'எம் சாண்ட்' பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை!

பொதுவாக கட்டுமான பணிகளுக்கு ஆற்று மணலை பயன்படுத்துவதே நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில், ஆற்று மணல் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட பல்வேறு தடைகள் காரணமாக கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மிக குறைந்த எண்ணிக்கையில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகளும் அமலாக்கத்துறை வழக்கு, சோதனைகளுக்கு பின் முற்றிலுமாக மூடப்பட்டது. இத்தகைய சூழலில், மக்கள் வேறு வழியின்றி எம் சாண்ட், பி சாண்ட் ஆகியவற்றை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இதில் தமிழகத்தில் எம் சாண்ட் பயன்பாட்டில் மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லை என்று கூறப்படுகிறது. கட்டுமான பணிக்கு எம் சாண்ட் தேவை என்பதை அருகில் உள்ள ஹார்டு வேர் கடை அல்லது டீலரிடம் தெரிவித்தால் போதும், அவர் உரிய முறையில் சப்ளை செய்துவிடுவார் என்று மக்கள் நினைக்கின்றனர்.
ஆனால், உண்மையில், உங்கள் வீட்டு கட்டுமான பணிக்கு எம் சாண்ட் தேவைப்படும் நிலையில், அதை நேரடியாக ஆலைகளிடம் இருந்து வாங்குவதற்கான வழிமுறைகள் இல்லை. டீலரிடம் இருந்து வாங்கும் போது அது எந்த நிறுவனத்தின் தயாரிப்பு என்பது உள்ளிட்ட விஷயங்களை தெளிவாக விசாரிக்க வேண்டும்.
உங்கள் வீட்டு கட்டுமான பணிக்கு அனுப்பப்படும் எம் சாண்ட் முறையான அனுமதி பெற்ற ஆலை வாயிலாக தயாரிக்கப்பட்டதா என்பதை விசாரித்து அறிய வேண்டும். அந்த ஆலையில் பொதுப்பணித்துறை வகுத்துள்ள வழிமுறைகளின் அடிப்படையில் எம் சாண்ட் தயாரிக்கப்பட்டதா என்பதை அறிய வேண்டும்.
பொதுவாக, பெரும்பாலான இடங்களில், கட்டுமான பணிக்கான கான்கிரீட் தயாரிப்பு, கட்டு வேலைக்கான கலவை தயாரிப்பதில் ஆற்று மணலுக்கு மாற்று என்பதால், அதே அளவில் எம் சாண்ட் சேர்க்கப்படுகிறது. ஆற்று மணலின் அளவுக்கு இணையாக எம் சாண்ட் சேர்த்து பயன்படுத்துவது சரியா என்பது இதுவரை முறையாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இத்தகைய சூழலில், உங்கள் வீட்டு கட்டுமான பணிக்காக அனுப்பப்படும் எம் சாண்டை எப்படி பயன்படுத்துவது என்பதில் தெளிவு வேண்டும். ஆற்று மணல் பயன்படுத்திய கட்டுமானத்துக்கும், எம் சாண்ட் பயன்படுத்திய கட்டுமானத்துக்கும் தோற்ற அளவில் தெரியும் வேறுபாடுகள் குறித்தும் ஆராய வேண்டும்.
ஆற்று மணலின் அடிப்படை தன்மை, அதில் சேர்ந்துள்ள மூலக்கூறுகளுக்கு முற்றிலும் மாறுபட்டவையாக எம் சாண்ட் அமைந்துள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதில் காணப்படும் வேறுபாடுகள் கட்டடத்தின் உறுதியில் வெளிப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
மேலும்
-
முதிய தம்பதி படுகொலை; ஈரோட்டில் மூவர் சிக்கினர்!
-
இந்தியாவை காப்பி அடிக்கும் பாகிஸ்தான்; வெளிநாடுகளுக்கு குழு அனுப்ப ஏற்பாடு
-
தருமபுரம் ஆதினத்தில் குருபூஜை விழா; வெள்ளி நாற்காலி பல்லக்கில் எழுந்தருளினார் ஆதினம்
-
அமெரிக்காவில் கடும் சூறாவளி; 27 பேர் பலி; மீட்பு பணி தீவிரம்
-
அமெரிக்காவில் 2 பேர் சுட்டுக்கொலை; உடற்பயிற்சி நிலையத்தில் கொடூர சம்பவம்
-
வால்பாறை மலைப்பகுதியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து; 40க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்