இணையதள சேவை பாதிப்பு ரேஷன் கடை முற்றுகை

வேப்பம்பட்டு:தமிழக அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதை வாங்குவதற்காக செல்லும் நுகர்வோரின் ரேஷன் கார்டுகளில் இருக்கும் பெயர்களில் யாராவது ஒருவர் அங்கு செல்ல வேண்டும்.
அவ்வாறு செல்லும்போது, அவர்களது கைவிரல் ரேகையை கடையில் உள்ள 'பி.ஓ.எஸ்.,' கருவியில் பதிவு செய்து, பொருட்களை ஊழியர்கள் வழங்குவர்.
அவ்வப்போது, இணையதள சேவை பாதிப்படைவதால், 'எஸ்.ஓ.எஸ்.,' கருவி வேலை செய்யாது. அப்போது, ரேஷன் பொருட்கள் விநியோகிப்பட மாட்டாது.
திருவள்ளூர் அடுத்த 86 வேப்பம்பட்டு பகுதியில் உள்ள ரேஷன் கடையில், 1,942 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக இணையதள இணைப்பு சீராக கிடைக்காததால், இம்மாதம் 401 பேருக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன.
பெரும்பாலானோர் கடைக்கு வந்து பொருட்கள் வாங்க முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் அதிருப்தியடைந்த 50க்கும் மேற்பட்டோர், நேற்று ரேஷன் கடையை முற்றுகையிட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும்
-
அமெரிக்காவில் 2 பேர் சுட்டுக்கொலை; உடற்பயிற்சி நிலையத்தில் கொடூர சம்பவம்
-
வால்பாறை மலைப்பகுதியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து; 70க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்
-
தமிழகத்தில் பரவலாக பெய்த கோடை மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு: முதல்வர் உமர் அப்துல்லா உறுதி
-
செங்கலுக்கு மாற்று பொருட்களை கட்டட பணிக்கு பயன்படுத்துவோர் கவனிக்க…
-
கட்டுமான பணிக்கு 'எம் சாண்ட்' பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை!