'கான்கிரீட்' கலவை தரம் சாலை பணியில் முக்கியம் அமைச்சர் வேலு அறிவுரை
சென்னை: 'கான்கிரீட்' கலவையில், சிமென்ட், கல் மற்றும் தண்ணீர் சரியான அளவில் கலக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்யுமாறு, பொறியாளர்களை, நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு அறிவுறுத்தியுள்ளார்.
சாலைகள் அமைப்பதில் தரக்கட்டுப்பாடு தொடர்பாக, சென்னை கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய அரங்கில் அமைச்சர் வேலு நேற்று, நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
இதில், அமைச்சர் பேசியதாவது:
தார் கலவை மற்றும் சிமென்ட் கலவை உருவாக்குவதில் தரக்கட்டுப்பாடு பொறியாளர்களுக்கு தான், 100 சதவீத பங்கு உள்ளது. தார் கலவை பணிக்கு உதவி பொறியாளர்கள் கட்டாயமாக, ஆலைக்கு செல்ல வேண்டும். பொறியாளர்கள் இல்லாமல், எவ்வித பணிகளும் மேற்கொள்ளக் கூடாது.
தார் கலவை உருவாக்கும் போது, ஜல்லி, தார் மற்றும் இதர மூலப்பொருட்கள் சரியான அளவில் கலக்கப்படுகிறதா என்பதை, தரக்கட்டுப்பாடு பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
கான்கிரீட் கலவையில் சிமென்ட், கல் மற்றும் தண்ணீர் சரியான அளவில் கலக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பாலங்கள் மற்றும் தடுப்பு சுவர்களில் பயன்படுத்தப்படும் கம்பிகளின் தரம், எடையை சோதனை செய்து, பதிவேட்டில் பதிய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
அமெரிக்காவில் கடும் சூறாவளி; 27 பேர் பலி; மீட்பு பணி தீவிரம்
-
அமெரிக்காவில் 2 பேர் சுட்டுக்கொலை; உடற்பயிற்சி நிலையத்தில் கொடூர சம்பவம்
-
வால்பாறை மலைப்பகுதியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து; 70க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்
-
தமிழகத்தில் பரவலாக பெய்த கோடை மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு: முதல்வர் உமர் அப்துல்லா உறுதி
-
செங்கலுக்கு மாற்று பொருட்களை கட்டட பணிக்கு பயன்படுத்துவோர் கவனிக்க…