பஸ்சில் 4 பவுன் நகை திருட்டு

ஆத்துார்: ஆத்துார், சீலியம்பட்டியை சேர்ந்தவர் செல்லம்மாள், 70. இவர் நேற்று, ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, தம்மம்பட்டி செல்லும் டவுன் பஸ்சில் சென்றுகொண்டிருந்தார்.

சீலியம்பட்டியில் இறங்கியபோது, அவர் அணிந்திருந்த, 4 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. அவர் புகார்படி, மல்லியக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement