ஸ்பானிஷ் ஆம்லெட்

தேவையான பொருட்கள்:



முட்டை - நான்குவெங்காயம் - மூன்று (நறுக்கியது) உருளைக்கிழங்கு - நான்குஉப்பு - தேவையான அளவு மிளகு துாள் - சிறிதளவு சில்லி பிளேக்ஸ் - தேவையான அளவு எண்ணெய் - சிறிதளவு

செய்முறை:



உருளைக்கிழங்கை எடுத்து தோலை உரித்து துண்டுகளாக வெட்டவும். சமைப்பதற்கு முன்பு அதை வெட்டி, தண்ணீரில் போட வேண்டாம். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். உருளைக்கிழங்கு வதங்கியதும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, மூன்று நிமிடங்கள் வதக்கவும்.

உப்பு, மிளகு துாள், சில்லி பிளேக்ஸ் சேர்க்கவும். ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து, உப்பு மற்றும் மிளகு துாள் சேர்த்து நன்கு கலக்கவும். சமைத்த உருளைக்கிழங்கு, வெங்காயம் கலவையை உடைத்த முட்டையுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.

அதை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஒரு சிறிய கடாயில் எண்ணெய் சேர்த்து சமமாக பரப்பி கலவையை ஊற்றி அனைத்து பக்கங்களிலும் சமமாக பரப்பவும். ஒவ்வொரு பக்கத்திலும் ஐந்து நிமிடங்கள் சமைக்கவும். இப்போது, தயாரான சுவையான ஸ்பானிஷ் ஆம்லெட்டை சூடாக பரிமாறலாம்.

Advertisement