தஞ்சாவூரில் நாட்டு வெடி குடோனில் தீ விபத்து; இருவர் பலி

5


தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நாட்டு வெடி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நாட்டு வெடி குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் ரியாஷ் 22, சுந்தர்ராஜ் 60, ஆகிய இருவர் உயிரிழந்தனர். இவர்களது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீ விபத்தில் குடோனில் இருந்த வெடிகள், அட்டை பெட்டிகள் சேதமடைந்தது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement