காமாட்சியம்மன் திருக்கல்யாணம்

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூரில், உள்ளூர் மாரியம்மன், கோட்டை காளியம்மன், மேட்டுப்பட்டி மாரியம்மன், காமாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த, 12ல் கணபதி ஹோமம், கொடியேற்றுதலுடன் துவங்கியது.

13ல் உள்ளூர் மாரியம்மனுக்கு கடைவீதியிலிருந்து வாணவேடிக்கை, தாரை தப்பட்டையுடன் கூழ் ஊற்றுதலும், 14ல் உள்ளூர் மாரியம்மன், மேட்டுப்பட்டி மாரியம்மன், கோட்டை காளியம்மன் சுவாமி களுக்கு அலங்காரம் செய்து, காமாட்சியம்மன் தோப்புக்கு பெண்கள் மாவிளக்குடன் ஊர்வலமாக சென்று இளங்காளியம்மனுக்கு மாவிளக்கு படைத்தல் நிகழ்ச்சி நடந்தது. 15ல் கோட்டை காளியம்மன் கோவிலில் பொங்கல் வைத்தல் மற்றும், 108 தீப்பந்தங்களுடன் பூ மிதித்தல் நிகழ்ச்சி நடந்தது. 16ல் காளியம்மன் கோவிலில் கோமாதா பூஜையும், 108 சங்கு அபிஷேகம், ஹோமம் மற்றும் பாலாபிஷேகம், தீர்த்த அபிஷேகம் செய்து அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. நேற்று காலை, 11:00 மணிக்கு சீர்வரிசை கொண்டு செல்லப்பட்டு, காமாட்சியம்மனுக்கு நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement