கலிபோர்னியாவில் வெடிகுண்டு தாக்குதல்; ஒருவர் பலி

பாம் ஸ்பிரிங்ஸ்: கலிபோர்னியாவில் கருத்தரிப்பு மையம் அருகே நிகழ்ந்த வெடிகுண்டு விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து எப்.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது; பாம் ஸ்பிரிங்ஸ் நகரில் உள்ள கருத்தரிப்பு மையத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று காலை 11 மணிக்கு கார் பார்க்கிங் அருகே இந்த வெடிகுண்டு வெடித்து சிதறியுள்ளது. இதில், பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. இதில், ஒருவர் உயிரிழந்துள்ளார். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர், எனக் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, குண்டுவெடிப்பில் உயிரிழந்த நபர் தான், இந்த தாக்குதலுக்கு காரணமாக நபராக இருக்குமோ? என்று சந்தேகிக்கப்படும் நிலையில், போலீசார் அதனை மறுத்து விட்டனர்.
மேலும், இந்தப் பகுதி மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்திய போலீசார், வேறு பகுதிகளில் எங்காவது வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதா? என்றும் சோதனை நடத்தினர்.

மேலும்
-
பா.ஜ., தலைவருடன் சந்திப்பு; போலீஸ் ஏட்டு இருவர் மாற்றம்!
-
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக யாக சாலைக்கு முகூர்த்தக் கால்
-
அமைதிப்பேச்சு தோல்வி; உக்ரைன் மீது மிகப்பெரிய டிரோன் தாக்குதலை நடத்தியது ரஷ்யா!
-
ஜுலை 1ம் தேதியில் இருந்து மீண்டும் மின்கட்டண உயர்வா? தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
-
ஹீட் ஸ்ட்ரோக் அபாயம்
-
பீட்டா மீன்கள் துள்ளாத மனமும் துள்ளும்!