தாசில்நாயக்கனுாரில் மாடு மாலை தாண்டும் திருவிழா




குளித்தலை: குளித்தலை அடுத்த, பாப்பகாப்பட்டி பஞ்.. தாசில்நாயக்க-னுாரில், பொம்மாநாயக்கர் மந்தையில் மாரியம்மன், மாயம்பெ-ருமாள் மற்றும் பட்டவன் கோவில் அமைந்துள்ளது. இங்கு மாலை தாண்டும் திருவிழா, கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

அன்று முதல் இப்பகுதி பக்தர்கள், ஒன்பது நாட்கள் விரதம் இருந்து தாசில்பொம்மாநாயக்கர் மந்தையில் உள்ள மாரியம்மன், மாயம்பெருமாள் மற்றும் பட்டவன் சுவாமிகளுக்கு பொங்கல் வைத்து தினமும் மூன்று கால சிறப்பு பூஜைகளை செய்து வழி-பட்டு வந்தனர். முக்கிய நிகழ்வாக மாலை தாண்டும் விழா நடந்-தது. இதில் கோவில் முன்பாக, 14 மந்தையர்கள் வரிசைப்படி வர-வேற்று, சலை எருது மாடுகளுக்கு புண்ணிய தீர்த்தம் தெளிக்கப்-பட்டது.

தொடர்ந்து தாரை தப்பட்டை முழங்க கோவில் எதிரே, 2 கி.மீ., தொலைவில் உள்ள எல்லைசாமி கோவிலுக்கு சலை எருது மாடு-களை அழைத்து சென்றனர். அங்கு சிறப்பு அபி ேஷகம் செய்து மாடுகள் ஓட்டத்தை தொடங்கி வைத்தனர். எல்லை கோட்டை நோக்கி, 200க்கும் மேற்பட்ட சலை எருது மாடுகள் ஓடின. இதில் ஜெகதாபி அருகே உள்ள, அய்யம்பாளையத்தை கோப்பாநாயக்கர் மந்தை மாடுகள் முதல் மற்றும் இரண்டாவதாக ஓடி வந்து வெள்ளை மரத்தை தாண்டி வெற்றி பெற்றது.
ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Advertisement