காஷ்மீரில் பாக். ஏவி வெடிக்காத 42 வெடிகுண்டுகள்: ராணுவம் பாதுகாப்பாக அழிப்பு

3

பூஞ்ச்; பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தாக்குதலின் போது ஏவப்பட்டு வெடிக்காத 42 குண்டுகளை இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பாக அழித்தனர்.



பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஜூல்லாஸ், தரதி, சலானி மற்றும் சலோத்ரி ஆகிய எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய போது வெடிக்காத குண்டுகள் ஏராளமாக உள்ளன. அவற்றை உள்ளூர் போலீஸ் உதவியுடன், ராணுவத்தினர் அழித்து வருகின்றனர்.


அதன் ஒரு பகுதியாக, மொத்தம் 42 வெடிக்காத வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பாதுகாப்பாக அழிக்கப்பட்டன. பயிற்சி பெற்ற நிபுணர்கள் குழுவின் வழிகாட்டுதல் பேரில் இந்நடவடிக்கை பாதுகாப்பாக மேற்கொள்ளப்பட்டதாக ராணுவம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.


வெடிகுண்டுகள் செயலிழப்பு நடவடிக்கையின் போது எவ்வித உயிரிழப்பும், பொருட்சேதமும் ஏற்படவில்லை, பாதுகாப்பாக அழிக்கப்பட்டது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement