தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கூட்டம்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு பங்குத்தொகை வழங்கப்பட்டது.

ஜி.அரியூர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பொதுபேரவை கூட்டம், வங்கி வளாகத்தில் நடந்தது. மண்டல இணை பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார்.

திருக்கோவிலுார் சரக துணை பதிவாளர் குறிஞ்சி மணவாளன் முன்னிலை வகித்தார். வங்கி செயலாளர் முருகன் வரவேற்றார்.

இதில் லாப பங்கு தொகை, 14 சதவீதத்தை காசோலையாக உறுப்பினர்களுக்கு, மண்டல இணை பதிவாளர் முருகேசன் வழங்கினார். அலுவலக கண்காணிப்பாளர்கள் சாந்தி, நிர்மல், செயலாட்சியர் மீனாட்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement