இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி!

புதுடில்லி: இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் நிறுத்தம் குறித்து பார்லிமென்ட் குழுவிடம் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளிக்க உள்ளார்.
இந்தியா - பாக்., இடையே கடந்த மே 10ல் திடீரென போர் நிறுத்த அறிவிப்பு வெளியானது. போர் நிறுத்தம் தொடர்பாக பார்லி சிறப்பு கூட்டத் தொடரை கூட்ட வேண்டும்; விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. எந்த சூழ்நிலையில் இந்தியா போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டது என்பது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து பார்லிமென்ட் குழுவிடம் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளிக்க உள்ளார். அவர் இந்தியா - பாக்., இடையே போர் நிறுத்தம் எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து முழு விளக்கத்தை அளிப்பார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் பார்லி குழு உடன் விக்ரம் மிஸ்ரி சந்திப்பு நடக்க இருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.


மேலும்
-
பொற்கோவிலை பாக். தாக்குதலில் இருந்து காத்தது எப்படி; மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம்
-
மத்திய பிரதேச அமைச்சரின் மன்னிப்பை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்; சிறப்பு குழு அமைத்து உத்தரவு
-
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்!
-
அ.தி.மு.க., -பா.ஜ., கூட்டணி: திருமாவளவன் சொல்வது இதுதான்!
-
ரூ.9 கோடியில் கட்டிய மேம்பாலம்; இணைப்புச் சாலை உள் வாங்கியதால் மக்கள் அச்சம்
-
பெங்களூருவில் கொட்டிய கனமழை; மழைநீர் தேக்கத்தால் மக்கள் அவதி!