மலேசிய பாட்மின்டன்: சாதிப்பாரா சிந்து

கோலாலம்பூர்: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், 'மாஸ்டர்ஸ் சூப்பர் 500' பாட்மின்டன் தொடர் இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் சிந்து, பிரனாய், ஆகர்ஷி காஷ்யப், சதிஷ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

சமீபகாலமாக சிந்து, பிரனாய், 'பார்மின்றி' தவிக்கின்றனர். சுதிர்மன் கோப்பையில் ஏமாற்றிய இவர்கள், இந்தோனேஷியா, டென்மார்க் அணிகளுக்கு எதிராக தோல்வியடைந்தனர். முதல் சுற்றில் சிந்து, ஜப்பானின் நாட்சுகியை சந்திக்கிறார். பிரனாய், ஜப்பான் வீரர் கென்டா நிஷிமோடோவை எதிர்கொள்கிறார்.


ஆண்கள் ஒற்றையரில் சதிஷ் கருணாகரன், ஆயுஷ் ஷெட்டி, பிரியான்ஷு ரஜாவத் களமிறங்குகின்றனர். பெண்கள் ஒற்றையரில் மாளவிகா பன் சோத், உன்னதி ஹூடா, ஆகர்ஷி காஷ் யப் சாதிக்க காத்திருக்கின்றனர்.

கலப்பு இரட்டையரில் துருவ் கபிலா-தனிஷா கிராஸ்டோ, ரோஹன் கபூர்-ருத்விகா ஷிவானி, சதிஷ்-ஆத்யா ஜோடிகள் பங்கேற்கின்றன.
தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சங்கர் முத்துசாமி, தருண், அன்மோல் கார்ப், தஸ்னிம் மிர் அசத்தினால் பிரதான சுற்றில் விளையாடலாம்.

Advertisement