மாணவியிடம் அத்துமீறல்; போக்சோவில் சிறுவன் கைது

நாகர்கோவில் : நாகர்கோவில் வடசேரி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ் 1 முடித்துவிட்டு பிளஸ் 2 செல்ல உள்ளார்.

இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதான 12 -ம் வகுப்பு மாணவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. சம்பவத்தன்று மாணவி வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்துகொண்ட அந்த சிறுவன் வீட்டுக்கு சென்று மாணவியிடம் பேசிக் கொண்டிருந்தார்.

திடீரென்று சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மாணவி சத்தம் போடவே அங்கிருந்து அவர் ஓடிவிட்டார். மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சிறுவனை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Advertisement