கிருஷ்ணகிரியில் தொடரும் மழை சாலையில் ஓடிய மழைநீரால் அவதி

கிருஷ்ணகிரி,கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கடந்த, 17 முதல் மாவட்டத்தில் பரவலாக பகல் நேரத்தில் வெயிலும், மாலை நேரத்தில் கனமழையும் பெய்து வருகிறது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் மழையளவு பதிவாகியது. தொடர்மழையால் அணைகள், ஏரி, குளம், குட்டைகள் உட்பட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

பழையபேட்டையில் இருந்து காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயில் செல்லும் சாலையில் சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட மழைநீரும், கழிவுநீரும் வெளியேறியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட, 22வது வார்டில் பாப்பாரப்பட்டி ஏரி நிரம்பி, உபரிநீர், கால்வாய் வழியாக அவதானப்பட்டி ஏரிக்கு செல்கிறது.
ஏற்கனவே, அவதானப்பட்டி ஏரியில் தண்ணீர் இருந்தநிலையில், தொடர் மழையால் உபரிநீர் வெளியேறி திம்மாபுரம் ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறது. நீர்நிலைகள் நிரம்பி வருகிறது.
அதேபோல ஆவின் மேம்பாலத்திலிருந்து மழைநீர் வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்பால், கிருஷ்ணகிரி ஆவின் நிறுவனத்தை சுற்றி மழை நீர் தேங்கியுள்ளது.
அதேபோல் அக்ரஹாரம், முல்லை நகர், பெத்தனப்பள்ளி பாரீஸ் நகர், பெத்ததாளப்பள்ளி சாமி நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

Advertisement