டி.கள்ளிபட்டியில் 850 பேருக்கு பட்டா வழங்க ஏற்பாடு தீவிரம்

தேனி: பெரியகுளம் அருகே டி.கள்ளிபட்டியில் நத்தம் புறம்போக்கு பகுதியில் வசித்த 850 பேருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக அரசின் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அரசு புறம்போக்கு இடத்தில் பல ஆண்டுகளாக வசிக்கும், நிலம் அற்ற தகுதியானவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பெரியகுளம் தாலுகா தாமரைகுளம் பிட் 1 ல் உள்ள டி.கள்ளிபட்டி கிராமத்தில் சர்வே பணிகள் நடந்தன. இதில் சுமார் 9 எக்டேர் பரப்பிலான அரசு நத்தம் புறம்போக்கில் 900 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

வசித்துவரும் வீடுகளை நில அளவைத்துறை சார்பில் அளவீடு செய்யும் பணிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் பயனாளிகளாக 850க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும், போடி பகுதியில் 4ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நில ஆவணங்களில் அரசு புறம்போக்கு என கணினியில் மாறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இதனை நில, இட உரிமை தாரர்கள் பெயரில் மாற்றம் செய்யப்பட்டு விட்டது என்றனர்.

Advertisement