சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 27 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படையினர் அதிரடி

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நக்சலைட்டுகள் 27 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
நக்சல் ஆதிக்கம் அதிகம் உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில், பாதுகாப்பு படையினர் அவ்வப்போது தேடுதல் வேட்டை நடத்தி, நக்சல்களை ஒடுக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில், நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் பகுதியில் நக்சல் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த போலீசார் மற்றும் சத்தீஸ்கர் போலீசார் இணைந்து, அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த நக்சல்கள், பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.
பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நக்சலைட்டுகள் 27 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த இடத்தில் இருந்து துப்பாக்கி, வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருக்கலாம் என பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.


மேலும்
-
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து தீவிர விவாதம்: மத்திய அமைச்சர் வலியுறுத்தல்
-
பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு; அண்ணாமலை கண்டனம்!
-
வக்ப் நிலமாக இருந்தாலும் அரசு கைப்பற்றலாம்; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
-
கவர்னர்கள் மூலம் மாநில அரசுகளுக்கு தடை போடும் மத்திய அரசு: ராகுல்
-
சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்களின் சேவை திடீர் ரத்து
-
கொலை குற்றவாளியல்ல: மோசடி செய்து ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்ற பூஜா கேத்கருக்கு முன்ஜாமின் வழங்கியது சுப்ரீம் கோர்ட்