ரோட்டோரத்தில் மது அருந்தினால் நடவடிக்கை: டி.எஸ்.பி., எச்சரிக்கை
திருவாடானை: ரோட்டோரங்களில் அமர்ந்து மது அருந்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, திருவாடானை டி.எஸ்.பி. சீனிவாசன் எச்சரித்துள்ளார்.
அவர் கூறியதாவது: ரோட்டோரங்களில் கும்பலாக அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கபடுகின்றனர். திருவாடானை, தொண்டி, எஸ்.பி. பட்டினம், ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இச் செயலில் ஈடுபட்டதாக ஒரு மாதத்திற்குள் 20க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்ய பட்டுள்ளது. ரோட்டோரத்தில் அமர்ந்து மது அருந்துபவர்களை பார்க்கும் மக்கள் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யலாம். மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞசாலையில் மேல்பனையூர் ஆகிய இடங்களில் விபத்தை தடுக்கும் வகையில் பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளது.
குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் அதிகமான இடங்களில் கண்காணிப்பு கேமாரக்கள் வைக்க முடிவு செய்யபட்டுள்ளது. கோயில் திருவிழாவிற்கு அனுமதி கேட்டு வருபவர்களிடம் கண்காணிப்பு கேமரா வைக்க வலியுறுத்தப்படுகிறது. திருவாடானை சப்-டிவிசனில் அதிகமான போலீசார் நியமிக்கபட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
மேலும்
-
கார் மரத்தில் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு
-
தி.மு.க., பிரமுகர் மீதான பாலியல் புகார்; விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம்!
-
நகைக்கடன் புதிய வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
-
டி.என்.பி.எஸ்.சி., தேர்வர்கள் கவனத்திற்கு: நேர்முகத்தேர்வு இன்றி 615 பணியிடங்கள் அறிவிப்பு
-
குறுவை தொகுப்புத் திட்டத்தை உடனே அறிவியுங்கள்: தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 27 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படையினர் அதிரடி