இலங்கை மாகாளியம்மன் கோயிலில் கொடை விழா

கீழக்கரை : கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சிக்குட்பட்ட முள்ளுவாடி கிராமத்தில் உள்ள மூன்று புளி இலங்கை மாகாளியம்மன் கோயிலில் கொடை விழா நடந்தது.

கடந்த மே 11ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. மே 19ல் திருவிளக்கு பூஜை, ஆன்மிக சொற்பொழிவு உள்ளிட்டவை நடந்தது.

நேற்று காலையில் தொண்டாலை மேலக்கரை செல்வ விநாயகர் கோயிலில் இருந்து நேர்த்திக்கடன் பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர்.

மூலவர் இலங்கை மாகாளி அம்மனுக்கு அபிஷேக அலங்கார தீபராதனைகள் நடந்தது. பூஜைகளை உத்தரகோசமங்கை அர்ச்சகர் நாகராஜன் பட்டர் செய்திருந்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அம்மன் வீதி உலா நடந்தது. பக்தர்களுக்கு பலர் தரிசனம் செய்தனர்.

Advertisement