சுருளி அருவியில் உணவு பாதுகாப்புத்துறை சோதனை

கம்பம்: சுருளி அருவியில் சுகாதாரமற்ற உணவு பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் சசி தீபா தலைமையில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டாள்.

அதிக நிறமூட்டப்பட்ட காலிபிளவர் பஜ்ஜி 12 கிலோ, பிளாஸ்டிக் பைகள் 5 கிலோ, காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடைக்காரர்களுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement