பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்; குழந்தைகள் 4 பேர் பலி; 38 பேர் படுகாயம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பள்ளி பஸ்சை குறிவைத்து நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் குழந்தைகள் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 38 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.


பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணம் குர்ஷ்தர் மாவட்டம் ராணுவ பள்ளிக்கூடம் உள்ளது. இதில் ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றி சென்ற பஸ்சை குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பஸ் வெடித்து சிதறியது.


இந்த விபத்தில் குழந்தைகள் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 38 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை.

Advertisement