மாநில அந்தஸ்து வேண்டி கையெழுத்து இயக்கம்

புதுச்சேரி : புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தகுதி வேண்டி கையெழுத்து இயக்கம் புதுச்சேரியில் நேற்று தொடங்கப்பட்டது.

புதுச்சேரி மாநிலத்திற்கு அந்தஸ்து வேண்டி நேரு எம்.எல்.ஏ., தலைமையிலான போராட்டக்குழு நேற்று கையெழுத்து இயக்கம் துவக்கினர். அதில் புதுச்சேரி காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ஆகியோரிடம் நேரு எம்.எல்.ஏ., தலைமையிலான போராட்டக் குழுவினர் கையெழுத்து வாங்கினர்.

கையெழுத்திட்ட வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் ஜூன் 27ம் தேதி தலைநகர் டில்லியில் நடக்கக்கூடிய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதாக உறுதியளித்தனர். பின் ஒற்றைக் கருத்தாக டில்லியில் நடக்கக்கூடிய தனி மாநிலத் தகுதி கோரிக்கைக்கான ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் ரங்கசாமிக்கு அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

நிகழ்ச்சியில், லோகு அய்யப்பன், மங்கையர் செல்வம், அழகர், சுவாமிநாதன், பஷீர், ராஜா, பாவாடைராயன், பிராங்க்ளின், சிகாமணி, தாமரைக்கண்ணன், சடகோபன், அன்பழகன், அரிகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement