குண்டு காயத்துடன் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி: ஐ.எஸ்.ஐ., பாதுகாப்புடன் சிகிச்சை

6

லாகூர்: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவனான அமீர் ஹம்சா, குண்டு காயத்துடன் சிகிச்சை பெற்று வரும் விவரம் வெளியாகி உள்ளது.


@1brஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் லஷ்கர் பயங்கரவாத இயக்கத்தை நிறுவிய 17 பேரில் அமீர் ஹம்சாவும் ஒருவன். பல்வேறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் மூளையாக செயல்பட்டவன்.


இவன் லாகூரில் உள்ள தனது வீட்டில் இருந்து குண்டு காயத்துடன் கொண்டு செல்லப்பட்டு லாகூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். அவனுக்கு பாகிஸ்தான் ராணுவ உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பாதுகாப்புடன் தொடர்ந்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவனில் உடலில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளது.


என்ன சம்பவம், எப்படி தாக்குதல் நடந்தது, பாதுகாவலர்களுக்கு என்ன ஆனது என்பது பற்றி எந்த தகவல்களையும் வெளியிடாமல் பயங்கரவாதிகள் மூடி மறைக்கின்றனர்.


பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் பல்வேறு சமூக ஊடகங்களில், ஹம்சா மீதான தாக்குதல் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.


அமெரிக்கா லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து,தேடப்பட்டு வரும் பயங்கரவாதி என்ற பட்டியலில் அமீர் ஹம்சாவை வைத்துள்ளது.


அமீர் ஹம்சா, தற்போது லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் நிதி வசூல், இதழ்கள், வெளியீடுகளை கவனிக்கும் பொறுப்பில் இருப்பவன் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement