மழையால் பயிர் சேதம் : இழப்பீடு தர கோரிக்கை

சென்னை :அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடலுார் உட்பட பல்வேறு மாவட்டங்களில், தொடர் மழையால், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில், நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த, பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள், மழை நீரில் நனைந்து வீணாகி உள்ளன.

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடை உடனடியாக வழங்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

Advertisement