அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் ஜூன் 5ல் நிறைவுபெறும்!

புதுடில்லி: அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் ஜூன் 5ம் தேதிக்குள் நிறைவடையும் என்று ஸ்ரீ ராம ஜென்மபூமி கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்தார்.
அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட விழா, கடந்தாண்டு நடந்தது. எஞ்சியிருந்த கட்டுமானப்பணிகளும் நிறைவு பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்ரீ ராம ஜென்மபூமி கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கூறியதாவது:
ஜூன் மாதம் 5 ஆம் தேதி ராமர் கோவில் கட்டுமானம் நிறைவடையும், 'ராமர் தர்பாரின்' பிரான் பிரதிஷ்டை நிகழ்வில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த ஆன்மீகத் தலைவர்கள் கும்பாபிஷேக விழாவிற்கு அழைக்கப்படுவார்கள், மேலும் அரசியல் தலைவர்களோ அல்லது மத்திய அல்லது மாநில அரசு அமைச்சர்களோ அல்லது அதிகாரிகளோ இந்த நிகழ்வில் பங்கேற்க மாட்டார்கள்.கோவில் கட்டுமானத்திற்குப் பின்னால் எந்த அரசியல் நோக்கங்களும் இல்லை. 500 ஆண்டுக்கும் மேலான போராட்டத்திற்குப் பிறகு இந்த தருணம் வந்துவிட்டது. விழா முடிந்த ஒரு வாரத்திற்குள் கோயிலின் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட பகுதி பொதுமக்களுக்குத் திறக்கப்படும்.
இவ்வாறு நிருபேந்திரா மிஸ்ரா கூறினார்.
மேலும்
-
தும்மங்குட்டை ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை
-
மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீச்சட்டி ஊர்வலம்
-
ஜாதி சான்றிதழ் கிடைக்காமல் மலைக்குறவன் மக்கள் தவிப்பு
-
'கலைமகள் சபா' மோசடி வழக்கில் தலைமறைவு குற்றவாளி 26ல் ஆஜராக நீதிபதி உத்தரவு
-
விளம்பர பிளக்ஸ் பேனர் வைக்க அனுமதிக்க கோரி ஆர்ப்பாட்டம்
-
மருந்து கடையில் பணம் ஆட்டை கேமராவை உடைத்து தப்பிய திருடன்