அங்கன்வாடிகளில் சேர்க்கை துவக்கம்; ஆதார் அட்டை பதிவும் உண்டு
கோவை; இரண்டு முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, அங்கன்வாடிகளில் சேர்க்கை நடந்து வருகிறது. இதை பெற்றோர்கள் பயன்படுத்திக்கொள்ள, மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் மூலம், கோவை மாவட்டத்தில் செயல்படும், 1640 குழந்தைகள் மையங்களில் சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு, முன்பருவக்கல்வி ஆகியவை வழங்கப்படுகிறது.
இதில், இரண்டு வயது முதல் ஐந்து வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு, முன்பருவக்கல்வி கற்றுத்தரப்படுகிறது. இதில் செய்கைபாடல், கதை, விளையாட்டு, கல்வி உபகரணங்கள் வாயிலாக கற்றுத்தரப்படுகிறது.
இதன் வாயிலாக, குழந்தைகளின் குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம் மற்றும் அறிவு வளர்ச்சிக்கு தேவையான விஷயங்கள், 12 மாதங்களுக்கு கற்றுத்தரப்படுகிறது.
குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு, பள்ளி செல்ல ஆயத்தப்படுத்தப்படுகின்றனர்.
அங்கன்வாடி பணியாளர்கள், தற்போது வீடுகள் தோறும் குழந்தைகளுக்கான சேர்க்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதனால் பெற்றோர்கள், 2 முதல் 5 வயதுக்குட்டப்பட்ட குழந்தைகளை, ஜூன் மாதத்திற்குள் குழந்தைகள் மையத்தில் தவறாமல் சேர்க்கவும்.
தற்போது ஆதார் அட்டை வழங்கும் பணியும், குழந்தைகள் மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை பயன்படுத்திக்கொள்ள, கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும்
-
தி.மு.க., அரசின் தோல்வியால் ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பைப் பறிப்பதா? அன்புமணி காட்டம்
-
உளவாளி யுடியூபர் ஜோதி மல்ஹோத்ராவின் போலீஸ் காவல் நீட்டிப்பு
-
அமுதே தமிழே, அழகிய மொழியே, எனதுயிரே…
-
என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம்
-
2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை; ஜம்மு காஷ்மீரில் 'ஆபரேஷன் த்ராஷி' தீவிரம்
-
டாஸ்மாக் முறைகேடு வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை!