என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம்

ஜெய்ப்பூர்: ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்,'' என ராஜஸ்தானில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார்.
ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று, கர்ணி மாதாவின் ஆசிர்வாதம் பெற்ற பிறகு நான் இங்கு வந்துள்ளேன். இன்று, ரூ.26,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து உள்ளேன். இந்த சந்தர்ப்பத்தில் நான் மக்களை வாழ்த்துகிறேன்.



வெறும் 22 நிமிடங்கள் தான்!
பாகிஸ்தான் 9 பயங்கரவாதி முகாம்களை வெறும் 22 நிமிடத்தில் அழித்து இருக்கிறோம். நமது முப்படைகளின் சக்கரவியூகத்தால் பாகிஸ்தான் மண்டியிட்டுள்ளது. இந்தியர்களின் ரத்தத்துடன் விளையாடுவதற்கு பாகிஸ்தான் பெரும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதலுக்கும் இந்திய பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பதை நிரூபித்துள்ளோம்.
பயப்பட மாட்டோம்!
அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்தியா பயப்படப் போவதில்லை. பாகிஸ்தானின் ரஹீம் யார் கான் விமானப்படைத் தளம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, ஒவ்வொரு இந்தியரும் ஒரே குரலில் ஒன்றுபட்டு, பயங்கரவாதத்தை ஒழிக்கவும் கற்பனைக்கு அப்பாற்பட்ட தண்டனையை உறுதி செய்யவும் தீர்மானித்தனர்.
துணிச்சல்!
இந்திய ஆயுதப் படைகளின் துணிச்சலால் தான் இன்று நாம் வலுவாக நிற்கிறோம். எங்கள் அரசாங்கம் மூன்று படைகளுக்கும் சுதந்திரக் கரம் கொடுத்தது. மேலும் ஒன்றாக, முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தும் உத்தியை வகுத்தன. அது பாகிஸ்தான் சரண் அடைய வழி வகுத்தது.
மோடியின் ரத்த நாளங்களில் ஓடுவது ரத்தம் அல்ல. கொதிக்கும் சிந்தூர் (குங்குமம்) தான் பாய்கிறது. மோடி இங்கே இருப்பதை பாகிஸ்தான் மறந்துவிட்டது. நான் நெஞ்சை நிமிர்த்தி, தலையை நிமித்து நின்று கொண்டிருப்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். அவர்களுடன் இனி எந்த வகையிலும் பேச்சு என்பதே கிடையாது. அப்படி பேசினால், அது அவர்கள் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பற்றியதாக பற்றி மட்டுமே இருக்கும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
வழிபாடு
ராஜஸ்தானில் புகழ் பெற்ற கர்ணி மாதா கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தினார்.









மேலும்
-
அடுத்த வாரம் நிச்சயதார்த்தம்; இன்று இளம் ஜோடி சுட்டுக் கொலை; இஸ்ரேல் தூதரக ஊழியர்களுக்கு நேர்ந்த துயரம்!
-
வெள்ளை இன மக்கள் கொலை: தென் ஆப்ரிக்க அதிபரிடம் நேரடியாக குற்றம்சாட்டிய டிரம்ப்
-
பாக்., ராணுவ தளபதியின் மதக்கண்ணோட்டம்: ஜெய்சங்கர் சாடல்
-
காவிரியில் தமிழகத்திற்கு 40 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு
-
'நீட்' முதுநிலை மாணவர் சேர்க்கை: நெறிமுறை வெளியிட்டது சுப்ரீம் கோர்ட்!
-
'ஆபரேஷன் சிந்தூர் ஏன்: யுஏஇ., அரசிடம் விளக்கிய இந்திய எம்.பி.,க்கள் குழு!