சிகிச்சை அளிக்காததே மூவர் உயிரிழப்புக்கு காரணம்; சீமான்

சென்னை: 'மதுரையில் வீட்டின் கூரை இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய மூவருக்கு, அரசு மருத்துவமனையில், உடனடி சிகிச்சை அளிக்கப்படாததே உயிரிழப்புக்கு காரணம்' என, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:

மதுரை வளையங்குளத்தில் மழை காரணமாக, வீட்டின் கூரை இடிந்துவிழுந்தது. இதில் சிக்கிய அம்மாபிள்ளை, வீரமணி, வெங்கட்டி ஆகியோர், அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்ட நிலையில், உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் இறந்துள்ளனர் அரசு மருத்துவமனையில், உயிர்காக்கும்மருத்துவம் கூட, உரிய நேரத்தில், உயர் தரத்தில் கிடைக்காத இழி நிலையில், தமிழக மக்களை வைத்திருப்பது, ஏற்க முடியாத பெருங்கொடுமையாகும்.

சென்னை போரூர் அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லை என, நடிகர் கஞ்சா கருப்பு கூறியபோது, வெளிப்படையாகவே மிரட்டப்பட்டார். தற்போது, மூவர் உயிரிழப்புக்கு, அமைச்சர் சுப்பிரமணியன் என்ன பதில் சொல்லப் போகிறார். மக்கள் நல்வாழ்வுத் துறையின் மோசமான நிர்வாக செயல்பாட்டால், இறந்தவர்களின் குடும்பத்திற்கு, தலா 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

Advertisement