வைகாசி சதய விழாவில் திருக்கல்யாண வைபவம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் திருவிடைக்கழி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி சதய விழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவில் திருவிடைக்கழி சுப்பிரமணியசுவாமி முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வைகாசி சதய விழாவை முன்னிட்டு, பிரம்மோற்சவ விழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏழாம் திருநாளான இன்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.


காலை சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. வள்ளி தேவசேனா சமேத முருக பெருமான் பிரகாரம் மண்டபத்திற்கு எழுந்தருளினர். பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்து யாகம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்து காப்பு கட்டி ஊஞ்சல் உற்சவம், மாலை மாற்றுதல் கன்னிகாதானம் செய்யப்பட்டு மாங்கல்ய தாரணம் நடைபெற்றது.



தொடர்ந்து பூரணாஹூதி செய்யப்பட்டு நெய்வேத்தியங்கள் படைக்கப்பட்டு பஞ்சமுக தீபாராதனை, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.

Advertisement